திருத்தணி: திருத்தணி பம்பை, உடுக்கை, கைசிலம்பாட்ட கலைக்குழுவினர் நலச்சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு விழா திருத்தணியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாலங்காடு சுற்றுப்புற பகுதிகளிலிருந்து கிராமிய இசைக்கலைஞர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சங்கத்தின் தலைவர் ஆஞ்சநேயன் தலைமை வகித்தார். துணை தலைவர் சதாசிவம், செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜ்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 100 பம்பை, உடுக்கை, கைசிலம்பாட்டம், நாதஸ்வரம், மேள தாளம் முழங்க கிராமிய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணி முதல் 2 மணி வரை தொடர்ந்து கிராமிய இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தினர்.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பூபதி பங்கேற்று, கிராமிய கலைஞர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர். நகர திமுக துணை செயலாளர் கணேசன், வட்ட செயலாளர் ரவி உள்பட கிராமிய இசை கலைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post கிராமிய கலைஞர்கள் இசை நிகழ்ச்சி appeared first on Dinakaran.