கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு

4 hours ago 3

தேவையான பொருட்கள்

1கிலோ திருக்கை மீன்
15 சிறிய வெங்காயம்
2தக்காளி
எலுமிச்சை அளவுபுளி
4பச்சை மிளகாய்
10பூண்டு பல்
1ஸ்பூன் சீரகம்
1ஸ்பூன் சோம்பு
21/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
21/2டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
1ஸ்பூன் மஞ்சள் தூள்
1மாங்காய் (விருப்பம்)
நல்லெண்ணெய்
உப்பு
1/2ஸ்பூன் வெந்தயம்
2கொத்து கருவேப்பிலை
1ஸ்பூன் மிளகு தூள்

செய்முறை:

பூண்டை அம்மியில் வைத்து லேசாக நைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அம்மியில் சோம்பு, சீரகம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து நைசாக அரைத்து கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் (முழு மஞ்சள், காய்ந்த மிளகாய், முழு தனியா பயன்படுத்தலாம்) ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.பின்னர் ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு சூடானதும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் நைத்து வைத்துள்ள பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் தக்காளி மற்றும் கல்லுப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து 3நிமிடம் நன்றாக வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் புளிக் கரைசலை சேர்த்து மூடி நன்றாக பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.பின்னர் நறுக்கிய மாங்காய் மற்றும் அரைத்த மிளகு தூள் சேர்த்து 2நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கிராமத்து திருக்கை குழம்பு தயார்.

 

The post கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு appeared first on Dinakaran.

Read Entire Article