தீவு நாடான கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின்வெட்டால் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் பற்றாக்குறையை சமாளிக்க பள்ளிகள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களை தற்காலிகமாக மூடுமாறு கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடால் கடுமையாக பாதிக்கப்பட்ட கியூபா மக்கள், அண்மையில் அதிகரித்த மின்வெட்டுகளால் மேலும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.