கியாஸ் விலை உயர்வு; சிலிண்டரை தூக்கி போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக துணை முதல்-மந்திரி

1 month ago 5

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மத்திய அரசுக்கு எதிராக பிரீடம் பூங்காவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளில், சீராக விலையை உயர்த்தி வருகிறது. தற்போது பெட்ரோல் மற்றும் கியாஸ் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொருவரையும் இது கடுமையாக பாதித்துள்ளது என கூறியுள்ளார். பிரதமர் மோடியின் நல்ல நாட்கள் வருகின்றன என்ற வாக்குறுதி பொய்யாகி விட்டது. அவர்கள் வாக்குறுதி அளித்தது இந்த நல்ல நாட்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்று, சி.பி.ஐ., அமலாக்க துறை மற்றும் வருமானவரி துறை ஆகிய மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றும் சித்தராமையா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்ட துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரும் பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றை தாக்கி பேசினார். அவர், சிலிண்டரை தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். விலை உயர்வுக்கு இவர்களே காரணம் என குற்றம் சாட்டிய அவர், பொதுமக்களின் கோபத்தினால், 2028-ம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தன்னுடைய உறுதியை வெளிப்படுத்தினார்.

Read Entire Article