கிண்டி தனியார் விடுதியில் பரபரப்பு ஜெனரேட்டரில் ஏற்பட்ட புகையால் மேலாளர் உள்பட 8 பேர் மயக்கம்: மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

1 week ago 7

ஆலந்தூர், : கிண்டி தனியார் விடுதியில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட புகையால் மயக்கமடைந்த மேலாளர் உட்பட 8 பேருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கிண்டி கத்திப்பாரா ஜிஎஸ்டி சாலையில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் விடுதியில் உள்ள ஜெனரேட்டர் மூலம் அனைத்து அறைகளுக்கும் மின்சாரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஜெனரேட்டரில் இருந்து புகை வெளியேறி விடுதி முழுவதும் பரவியது. இதில், அறையில் தங்கியிருந்த 7 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். மேலும், விடுதி மேலாளர் பரத்தும் மயக்கம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பரங்கிமலை போலீசாரும் கிண்டி தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மயக்கம் அடைந்தவர்களை மீட்டு கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 8 பேரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிண்டி தனியார் விடுதியில் பரபரப்பு ஜெனரேட்டரில் ஏற்பட்ட புகையால் மேலாளர் உள்பட 8 பேர் மயக்கம்: மருத்துவமனையில் தொடர் சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article