கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

1 week ago 3

 

திருவண்ணாமலை, மே 5: திருவண்ணாமலை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த மயிலை இளைஞர்கள் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் மயில் ஒன்று நேற்று தவறி விழுந்தது. சுமார் 40 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் குறைந்த அளவில் தண்ணீரில் இருந்தது. கிணற்றில் விழுந்த மயிலால் மீண்டும் மேலே பறந்து வர முடியாமல் தத்தளித்தது. அதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஆபத்தான சூழலையும் கருதாமல், கயிறை கட்டி கிணற்றுக்குள் இறங்கி பாதுகாப்பாக மயிலை மீட்டுக் கொண்டு வந்தனர்.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் தேசிய பறவையான மயிலை காப்பாற்றிய இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

The post கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article