
சென்னை,
கிச்சா சுதீப்பின் 'கே47' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. விஜய் கார்த்திகேயன் இயக்கும் இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேக்ஸ் படத்திற்குப் பிறகு சுதீப்பும் விஜய் கார்த்திகேயனும் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும்.
பட்டாசு, லெவன் போன்ற படங்களில் தனது தீவிர நடிப்பிற்காக அறியப்பட்ட நவீன் சந்திரா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ''மார்கன்'' படத்தில் நடித்திருந்த நடிகை தீப்ஷிகா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேக்ஸின் தொழில்நுட்பக் குழு இந்த படத்திலும் தொடர்கிறது. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார் மற்றும் சேகர் சந்துரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.