காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா நாளை பதவியேற்க அழைப்பு: கவர்னர் சார்பில் கடிதம்

3 months ago 17

ஜம்மு: காஷ்மீரில் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றது. சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 5 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் மனோஜ்சின்ஹாவை கடந்த 11ம் தேதி உமர்அப்துல்லா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்று புதிய ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் சார்பில் அவரது முதன்மை செயலாளர் நேற்று உமர்அப்துல்லாவை சந்தித்து ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு கடிதம் வழங்கினார்.

அந்த கடிதத்தில்,’ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லாவிடம் இருந்து அக்டோபர் 11ம் தேதி வந்த கடிதத்தில் சட்டப்பேரவை தலைவராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் புதிய அரசை அமைக்க வருமாறு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளை காலை 11.30 மணிக்கு ஸ்ரீநகரில் உள்ள எஸ்கேஐசிசியில் உங்களுக்கும், உங்கள் அமைச்சரவை குழுவுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* ஜனாதிபதி ஆட்சி ரத்து

ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,’2019ம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் மறுகட்டமைப்பு சட்டத்தின் 73ஆவது பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 2019 அக்டோபர் 31ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது.

The post காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா நாளை பதவியேற்க அழைப்பு: கவர்னர் சார்பில் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article