காஷ்மீர் தாக்குதல்; காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரை டெல்லிக்கு அழைத்துவர ஏற்பாடு!

3 hours ago 2

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரை டெல்லிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 4 பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளார்.

20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரை டெல்லிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இன்று மதியம் டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார் பரமேஸ்வர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் சிக்கியிருந்த தமிழர்கள் அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றம். பரமேஸ்வரைத் தவிர மேலும் ஒருவருக்கு அனந்த்நாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

The post காஷ்மீர் தாக்குதல்; காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரை டெல்லிக்கு அழைத்துவர ஏற்பாடு! appeared first on Dinakaran.

Read Entire Article