காஷ்மீரில் 3-வது கட்ட தேர்தல் சூழலில் என்கவுன்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை

3 months ago 31

கத்துவா,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று மாலை துப்பாக்கி சண்டை நடந்தது. இதனை தொடர்ந்து நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.

போலீசார் தரப்பில் 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதற்கு முன் ஜம்முவின் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின் இன்று கூறும்போது, 3-வது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என கூறினார்.

எனினும், பயங்கரவாதியை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், தேர்தலின்போது பயங்கரவாத தாக்குதலோ அல்லது வன்முறையோ நடக்காமல் இருக்கும் என்று கூறினார். நேற்று பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்டரின்போது, போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் பஷீர் அகமது என்பவர் சுடப்பட்டு பலியானார். 2 போலீஸ் அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 8-ந்தேதி எண்ணப்படும். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வாகன சோதனை, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Read Entire Article