காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: சுட்டு கொல்லப்படுவதற்கு முன் தாயுடன் பேசிய தீவிரவாதி

5 hours ago 2

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவின் நாதெர் டிரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பகுதியினர் அங்கு விரைந்து சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டதீவிரவாதிகளின் பெயர்கள் ஆசிப் அகமது ஷேக்,அமீர் நாசீர் வானி,யவார் அகமது பட் என்பதும் அவர்கள் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
மேலும் அமீர் நாசிர் வானி சுட்டு கொல்லப்படுவதற்கு முன் தனது தாயிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். ஏகே 47 ரக துப்பாக்கியை வைத்து கொண்டு அவர் தொலைபேசியில் பேசுகிறார். அப்போது அவரது தாய் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து விடுமாறு கூறுகிறார். ஆனால், தீவிரவாதி அதற்கு மறுத்து விட்டார். ராணுவம் வரட்டும், நான் பார்த்து கொள்கிறேன் என்று அவர் கூறுவது கேட்கிறது. அதன் பின் சில நொடிகளில் அவர் சுட்டு கொல்லப்பட்டார். தாயுடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: சுட்டு கொல்லப்படுவதற்கு முன் தாயுடன் பேசிய தீவிரவாதி appeared first on Dinakaran.

Read Entire Article