புதுடெல்லி: காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் புதால் கிராமத்தில் கடந்த 45 நாளில் மர்ம நோயால் 45 பேர் பலியாகினர். காய்ச்சல், குமட்டல், சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் ஓரிரு நாட்களில் பலியானது அதிர்ச்சி அளித்தது. இந்த மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரிக்க பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய விசாரணை குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைத்துள்ளார்.
இக்குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், விவசாயம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் மற்றும் நீர்வள அமைச்சகங்களின் நிபுணர்கள் இடம்பெறுவார்கள். இக்குழு இன்று புறப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு செய்ய உள்ளனர்.
The post காஷ்மீரில் 16 பேர் மர்ம மரணம்; விசாரணை குழு அமைத்தார் அமித்ஷா appeared first on Dinakaran.