காவிரிக் கரையோரத்தில் பனை விதைகள் நடவு செய்யும் மாணவிகள்

4 weeks ago 5

தமிழ்நாட்டின் அடையாளம் பனைமரம். வேர் முதல் நுனி வரை பயன் தருவதால் இதற்கு ‘கற்பகத்தரு’ என்றும் பெயருண்டு. பனைமரம் பல்லுயிர்களின் வாழிடமாக விளங்கிவருகிறது. பனை ஓலையின் ஆயுட்காலம் 400 ஆண்டுகளாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் பண்டைய கால இலங்கியங்களை எழுத ஓலைச்சுவடியை பயன்படுத்தினர். பனைமரம் வறட்சியான பகுதிகளில் ஓங்கி வளரும் தன்மைகொண்டது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதோடு ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளில் நடப்படுவதால் மண்அரிப்பைத் தடுக்கும் அரணாக உள்ளது.

இயற்கையைப் பாதுகாக்கும் முக்கியப் பங்காற்றும் பனைமரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடி பனைவிதைகள் நடவு செய்யும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் அன்னை மகளிர் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஏராளமானோர் காவிரி ஆற்றின் கரையோரம் மற்றும் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகள் சார்ந்த பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

காசி விஸ்வநாதர் ஆலயம் முதல் அனிச்சம்பாளையம் சாலையில் உள்ள வாய்க்கால் கரையோரத்தில் 2000க்கும் மேற்பட்ட பனைவிதைகளை நடும் பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டனர். மேலும், நடவு செய்யப்பட்ட பனைவிதைகளை முறையாகப் பராமரித்துப் பாதுகாப்போம், என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

The post காவிரிக் கரையோரத்தில் பனை விதைகள் நடவு செய்யும் மாணவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article