காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்

2 months ago 16

புதுக்கோட்டை,செப்.30: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் மிசா மாரிமுத்து பேசியதாவது:
கவிநாடு கண்மாயில் ஆக்கிரம்பிப்பை அகற்ற வேண்டும். வர்த்தக வாரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு விருகிறது. இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்.

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் தனபிதி கூறியதாவது:
காவிரி – வைகை – குண்டாறு திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் வறட்சி நிலை கருதி இந்த ஆண்டு அரசு நிதி ஒதுக்கீடு பெற்று பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்தோட்டக் கழகம் தைல மரக்காடுகளில் மழைத்தண்ணீரைத் தேக்குவதை முற்றிலும் அகற்றி தைலமரம் நடுவதை தடை செய்ய வேண்டும்,) அண்டக்குளம் கிராமத்தில் அரசின் பொது உடமை வங்கி துவங்க நீண்ட நாட்களாக விண்ணப்பித்தும் இதுவரை துவங்கவில்லை இங்கு புதிய வங்கிகளை துவங்க வேண்டும். குளத்தூர் தாலுகா,தெம்மாவூர், மின்னாத்தூர், வந்தனாகோட்டை கிராமங்களில் உள்ள நல்ல விளைநிலங்களில் தொழில் பூங்கா அமைக்க உள்ள அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். கடந்த 2023-24 ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகி செல்லத்துரை:பொதுப்பணித்துறை குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை வேண்டும். ஜேசிபியை விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுக்க வேண்டும். ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.வடகாடு பலாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொக்குமடை ரமேஷ்: கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த நெல் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணைக் கால்வாயில் தேவையான அளவுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும். சம்பா சாகுபடி தொடங்கி உள்ளதால் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வெத்து பேசினர்.

The post காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article