காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் தாமதம் ஏன்? - நீர்வளத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

3 weeks ago 6

மதுரை: காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் ஏன் தாமதமாகிறது என்பது குறித்து தமிழக நீர்வளத் துறை தலைமைச் பொறியாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன், முனியசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இத்திட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பயனடைவர். இருப்பினும் இணைப்பு திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

Read Entire Article