சென்னை: காவல்துறை அதிகாரிகள் முன்மாதிரியான துணிச்சல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
அ) கடலூர் மாவட்ட ஆர்.எஸ்.ஐ தேவநாதன் ஒரு சாத்தியமான விபத்தைத் தடுத்தார்.
பண்ருட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் தேவநாதன் (50) த/பெ சுந்தரம், தோட்டப்பட்டு என்பவர் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். (10.03.2025) அன்று, நண்பகல் 12:30 மணியளவில், பண்ருட்டி நான்குமனை சாலை சந்திப்பில் போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருந்தபோது, மூதாட்டி ஒருவர் அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை கவணிக்காமல் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். விரைவாகச் செயல்பட்டு, அவர் உடனடியாக அவரது கையைப் பிடித்து நிறுத்தி, அவரது பாதுகாப்பை உறுதி செய்தார். ஆம்புலன்ஸ் கடந்து சென்றதும், அந்தப் பெண் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவினார். இதனால் சாத்தியமான விபத்தைத் தவிர்த்தார்.
ஆ) தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையின் விரைவான நடவடிக்கை, கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய வழிவகுத்தது.
08.03.2025 ஆம் தேதி சுமார் 14.45 மணி அளவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளங்கண்ணி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட கருவைக்காடு, வேளாங்கண்ணி இரயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஜனார்த்தனன் (22) பெங்களூரில் வசிந்தவர் கொலை செய்துவிட்டு சந்தேக நபர்கள் தஞ்சாவூர் நோக்கி ரயிலில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர், நாகப்பட்டினம் மாவட்ட சிறப்புப் பிரிவு ஆய்வாளர் ஆனந்தராஜன், சந்தேக நபர்களின் உடைகுறிப்புடன் கூடிய தகவலை உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட சிறப்புப் பிரிவு ஆய்வாளர் ராமதாஸிடம் தெரிவித்தார். இந்தத் தகவலின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் நகர தனிபிரிவு காவலர்களும் மற்றும் மாவட்ட சிறப்புத் தனிப்படை அலுவலகர்களும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகள் மற்றும் ரயில்களிலும் கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது. ரயில் நிலையத்தின் பின்புற வாசல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற இரண்டு நபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர், சரிபார்த்ததில், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு, அவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கொலை வழக்கில் இருவரும் தொடர்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குற்றவாளிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்ட தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு தகவல் தெரிந்த ஒரு மணி நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்தது பாராட்டுக்குரியது.
மேற்படி காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் முன் மாதிரியான அர்பணிப்பு. துணிச்சல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கான அர்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர், சங்கர் ஜிவால் (14.03.2025) இன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
The post காவல்துறையின் நற்பணிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார் காவல்துறை தலைமை இயக்குநர் appeared first on Dinakaran.