திருச்சி: திருச்சியில் போலீஸாரின் 'கண்டறிய முடியாத சான்றிதழை' (நான்-டிரேஸபிள் சர்ட்டிஃபிகேட்) பெற்று, பலர் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஏராளமான போலி பத்திரங்களை பதிவு செய்வதாகப் புகார்கள் வந்தன. எனவே, நான்-டிரேஸபிள் சான்று வழங்கும்போது கவனமாக இருக்குமாறு காவல் ஆணையர் என்.காமினி எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், நிலப்பத்திரம் காணாமல் போனது தொடர்பாக ஒருவருக்கு நான்-டிரேஸபிள் சான்றிதழை வழங்கியதும், அதற்காகபணம் வாங்கிக்கொண்டு, காவல் ஆய்வாளருக்குப் பதிலாக, அவரே கையெழுத்திட்டதாகவும் காவல் ஆணையருக்குப் புகார்கள் சென்றன.