கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

3 months ago 14

செங்கல்பட்டு: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு அண்ணாநகர், வேதாச்சலநகர், மகாலாட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் நடந்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அண்ணாநகர் பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதா என செங்கல்பட்டு நகராட்சி ஆணையரிடம் கலெக்டர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஆணையர் இன்னும் தூர் வாரப்படவில்லை என பதில் அளித்தார். பருவமழை தொடங்கிவிட்டது, எப்போது தூர்வாரும் பணிகளை தொடங்க உள்ளனர் என கலெக்டர் கடிந்துகொண்டார். பின்னர் அண்ணாநகர் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரி தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article