காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

2 weeks ago 5

சென்னை,

கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைய உள்ளது. அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read Entire Article