காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

2 months ago 13

சென்னை,

தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்டுள்ளது. 

Read Entire Article