காலில் காயமடைந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர்

2 months ago 10

 

பாலக்காடு,பிப்.23: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி புதூர் கிராமப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட குளப்படி பகுதியில் அமைந்துள்ள தனியார் தோட்டத்தில் காயமடைந்த நிலையில் கரடி ஒன்று காணப்பட்டது. இவற்றை பார்த்த தோட்டத்தொழிலாளர்கள் அட்டப்பாடி ரேஞ்சு வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் பாரஸ்ட் ரேஞ்சு அதிகாரி சபீர், துணை அதிகாரி பினு ஆகியோர் தலைமையில் ஆர்.ஆர்.டி., காவலர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு கரடியை மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து மன்னார்க்காடு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு கூண்டில் கரடியை அடைத்து கால்நடை சர்ஜன் டாக்டர். டேவிட் இப்ரஹாம் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏழு வயதுடைய கரடி, வலது காலில் சிறிய காயமடைந்துள்ளது.உயிருக்கு எந்தவிதமான அபாயமும் இல்லை. கூண்டிற்குள் அடைக்கப்பட்ட கரடி திருச்சூர் மிருகக்காட்சிச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கரடி அச்சத்திலிருந்து நிம்மதியடைந்தனர்.

 

The post காலில் காயமடைந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article