காலி மருத்துவ இடங்களை வரும் 30க்குள் சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்பி முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

6 hours ago 2

புதுடெல்லி: நடப்பாண்டில் பல தனியார் கல்லூரிகளில் ஓரிரு மருத்துவ மாணவர்கள் காலியிடங்கள் உள்ளதாகவும், இதனால் கணிசமான நிதி பற்றாக்குறையை சந்திப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில்,

விலை மதிப்பற்ற மருத்துவப்படிப்பு இடங்களை வீணடிக்காமல் உடனடியாக நிரப்ப வேண்டும். அதாவது நடப்பாண்டு டிசம்பர் 30ம் தேதிக்குள் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடத்தி காலி இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக மருத்துவ சேர்க்கையை நடத்தக் கூடாது. அரசு மூலமாக தான் நடத்த வேண்டும். மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு கலந்தாய்வில் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post காலி மருத்துவ இடங்களை வரும் 30க்குள் சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்பி முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article