
ஸ்டாவஞ்சர்,
ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வரும், நார்வே செஸ் தொடரில் இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி குகேஷ் அபார வெற்றிபெற்றார்.
இந்த தொடரில் இரு வீரர்களும் மோதிய முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றிபெற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், குகேஷுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், போட்டியின் கடைசி நிமிட காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து, நடிகை கங்கனா ரனாவத் மற்றும் சமந்தா உள்ளிட்டோர் குகேஷுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.