கார்பென்டருக்கு ₹96 ஆயிரம் அபராதம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை வீட்டில் முறைகேடாக மின்இணைப்பு

3 weeks ago 5

குடியாத்தம், அக்.26: குடியாத்தம் அருகே வீட்டில் முறைகேடாக மின்இணைப்பை பயன்படுத்திய கார்பென்டருக்கு ₹96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் லோகேந்திரன். கார்பென்டர். இவர் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்த பழைய வீட்டை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய வீடு கட்டி 3 மாதங்கள் ஆகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு லோகேந்திரன் வீட்டில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலத்திற்கு தொலைபேசி மூலம் புகார் செய்துள்ளார். அதன்பேரில், மின்வாரிய ஊழியர் ஒருவர் வந்து பழுதான மின்இணைப்பை சரி செய்துவிட்டு சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, காட்பாடியில் இருந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் லோகேந்திரன் வீட்டில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, சட்ட விரோதமாக மின்இணைப்பை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ₹96,851 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், உரிய காலத்தில் அபாராதத்தை செலுத்ததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, லோகேந்திரன் அந்த அபராத தொகையை செலுத்திய குறுஞ்செய்தி வந்ததும், அதிகாரிகள் மீண்டும் மின் இணைப்பை கொடுத்துள்ளனர். இதற்கிடையில், மீட்டர் பாக்ஸில் ஏதேனும் குளறுபடி உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் லோகேந்திரன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார்பென்டருக்கு ₹96 ஆயிரம் அபராதம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை வீட்டில் முறைகேடாக மின்இணைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article