
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது, நலன் குமாராசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சார்தார் 2' படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், 'டாணாக்காரன்' பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி தனது 29-வது படத்தில் நடிக்க உள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'கார்த்தி 29' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இவரை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர் தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ' மற்றும் சும்புவுடன் 'மாநாடு' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‛ஜீனி' படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்து வருகிறார்.