கார்த்திகை திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்..

1 month ago 5
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை திருவிழாவை ஒட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்காக தங்க பிள்ளையார், முருகன், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுத்தருளினர். மங்கையர்கரசியார் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியதை அடுத்து மாதொருபாகன் எழுந்தருளினார். இதையடுத்து கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றி தீபாரதனை காட்டி உடன், தீப மலை உச்சியில் தயாராக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.   2668 அடி உயர மலை உச்சியில் 4500 கிலோ எடை கொண்ட நெய்யுடன் மகா தீபம் சுடர் விட்டு எரியத் தொடங்கியதும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். அடுத்து வரும் 11 நாட்களுக்கு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் பிரகாசிக்கும். கார்த்திகை மகா தீபத் திருவிழாவில் பங்கேற்று தரிசிக்க பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். விழா ஒட்டி திருவண்ணாமலை கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது....
Read Entire Article