கார் விபத்தில் சிக்கிய இளம் கிரிக்கெட் வீரர்: என்ன நடந்தது..?

3 months ago 27

லக்னோ,

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் லக்னோவில் தொடங்குகிறது. ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இந்த போட்டிக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ள 19 வயது ஆல்-ரவுண்டர் முஷீர் கான் தனது தந்தை நவ்சத் கானுடன் உத்தரபிரதேச மாநிலம் அசம்கார்க் பகுதியில் இருந்து லக்னோவுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார்.

இதையடுத்து இருவரும் உடனடியாக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முஷீர் கானுக்கு கழுத்து பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் காயத்தில் இருந்து மீண்டு வர 3 மாதங்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் இரானி கோப்பை மற்றும் அக்டோபர் 11-ந் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட முடியாது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன் சப்ராஸ்கானின் தம்பியான முஷீர்கான் சமீபகாலமாக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் நடந்த துலீப் கோப்பை போட்டியில் இந்தியா பி அணிக்காக விளையாடிய முஷீர் கான் முதல் ஆட்டத்திலேயே 181 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article