கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கேரள சுற்றுலா பயணிகள்

3 months ago 21
கொடைக்கானலில் தொடர் மழையால் வத்தலக்குண்டு மலைச்சாலையில் மூலையாறு அருகே கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஓட்டுநர் உள்ளிட்ட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கேரளா மாநிலம் கோட்டையம் பகுதியில் இருந்து 5 பேருடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் சாலையோரங்களில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article