காரைக்குடி தொகுதி முழுவதும் 50,000 மரக்கன்றுகள் நட திட்டம் எம்எல்ஏ மாங்குடி தகவல்

4 months ago 14

காரைக்குடி, அக். 26: காரைக்குடியில் புதிதாக கட்டப்பபட்டு வரும் சட்டக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சட்டக்கல்லூரி முதல்வர் தலைமைவகித்தார். எம்எல்ஏ மாங்குடி மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். காரைக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து அதனை நோக்கி பயணித்து வருகிறோம். இந்த சட்ட கல்லூரி வளாகம் முழுவதும் ஒரு மாணவருக்கு ஒன்று மரக்கன்றுகள் வீதம் நட்டு பராமரிக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடம் வளர வேண்டும். சட்டம் பயிலும் நீங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். இயற்கையை அழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடு வளம் பெற மக்கள் நலம் பெற நாம் இணைந்து செயல்படுவோம். மரம் நமக்கு வரம் அதனை போணி பாதுகாக்க வேண்டும் என்றார்.

The post காரைக்குடி தொகுதி முழுவதும் 50,000 மரக்கன்றுகள் நட திட்டம் எம்எல்ஏ மாங்குடி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article