காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா

6 hours ago 5

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான பிரசித்தி பெற்ற மிகப் பழமையான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சிவபெருமானின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையான ரத்தின சபை என்ற சிறப்பு பெற்ற சிவத்தலமாகும். இக்கோயிலில் காரைக்கால் அம்மையாரின் அருளாளர் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையாரின் அருளாளர் விழா மிக விமரிசையாக நடந்தது.

காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடந்தது. பின்னர், சிறப்பு மலர் அலங்காரத்தில் புஷ்பநாக ஊஞ்சல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, காரைக்கால் அம்மையாரை தரிசித்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, இவ்விழாவின் 2ம் நாளான நேற்று இரவு அம்மன் திருவீதியுலாவும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி மேற்பார்வையில் கோயில் நிர்வாக ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா appeared first on Dinakaran.

Read Entire Article