காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த கும்பலுக்கு உதவிய அரசு நில அளவையாளர் கைது

3 months ago 30
காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள பழமையான ஸ்ரீபார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுமனையாக விற்பனை செய்த கும்பலுக்கு உதவியதாக அரசு நில அளவையர் ரேணுகா தேவி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சிவராமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போலி அரசு ஆவணம், முத்திரை மற்றும் ஆட்சியர் கையெழுத்து ஆகியவற்றை போலியாக உருவாக்க ரேணுகா தேவி உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி ஆனந்துக்கு எதிராகவும், தக்களூர் திருலோகநாத சுவாமி ஆலய நில மோசடி வழக்கிலும் காங்கிரஸ் பிரமுகர் சிவகுமாருக்கு எதிராகவும் காவல் துறையினர் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.
Read Entire Article