சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரைக்காடு சுங்கச்சாவடியில் உத்தரப்பிரதேச பேருந்தை சோதனையிடும் போது போலீசாருக்கும் பேருந்தில் இருந்தவர்களுக்கும் நடந்த மோதல் விவகாரத்தில் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த 3 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூர் மதுவிலக்கு பிரிவு தலைமைக் காவலர் செந்தில்குமார், காவலர்கள் சுகவனேஸ்வரன், முத்தரசு சஸ்பெண்ட் செய்தனர். வடமாநிலத்தவர்கள் – போலீசார் மோதும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
The post காரைக்காடு சுங்கச்சாவடியில் வடமாநிலத்தவர்களை தாக்கியதாக 3 காவலர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.