புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா நிதி நிலைத்தன்மையை அறிக்கையை நேற்று வெளியிட்டு பேசுகையில், ‘‘தொழில் துறையினர் தங்களின் தொழில் வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டிருப்பதாலும், அதிக நுகர்வோரை நாடு கொண்டிருப்பதாலும் 2025ம் ஆண்டில் பொருளாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய நிச்சயமற்ற நிலை காரணமாக 2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் மந்தமாக இருந்தாலும், 2ம் பாதியில் அது வேகமெடுக்கும்’’ என்றார். நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வங்கிகளில் வராக்கடன் 2.6 சதவீதமாக சரிந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post 2025ம் ஆண்டில் பொருளாதாரம் மேம்படும்: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.