ஆலந்தூர்: நங்கநல்லூர், சிவில் ஏவியேஷன் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் வீட்டு முகப்பில் தனது காரை நிறுத்தி வைத்திருந்தார்.அப்போது, காரின் பேனட் பகுதியில் பாம்பு ஒன்று திடீரென நுழைந்துள்ளது. இதையடுத்து வெங்கடேசன் கிண்டி தீயணைப்பு படை வீரர்களிடம் தெரிவித்தார். அவர்கள் விரைந்து சென்று காரின் இன்ஜின் பகுதியில் மறைந்திருந்த 70 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதை வேளச்சேரி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
The post காரில் புகுந்த 7 அடி நீள பாம்பு appeared first on Dinakaran.