காரியாபட்டி, ஜூலை 10: காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய அரசு கட்டிடங்களை அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார். காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. காரியாபட்டி பந்தனேந்தல் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், எசலிமடையில் கலையரங்கம், மாங்குளத்தில் ரேஷன் கடை ஆகிய கட்டிடங்களை நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர், மாவட்ட பொருளாளர் வையம்பட்டி வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசத்தி, முன்னாள் யூனியன் துணை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பந்தனேந்தல் சுப்பிரமணியம், மாங்குளம் லட்சுமணன், ஒன்றிய செயலாளர் செல்லம் உட்பட பலர் பங்கேற்றனர்.
The post காரியாபட்டியில் புதிய ஊராட்சி அலுவலகம்: அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.