காரியத் தடைகளை நீக்கும் அஞ்சனை மைந்தன்

3 weeks ago 5

ஸ்ரீராம ஜெயம்

அனுமான் அஞ்சனா சூனுஹ வாயு புத்ரோ மஹாபலஹ
ராமேஷ்டஹா பல்குண சக கிங்காக்க்ஷோ அமித விக்ரமஹ
ஊத்வதிக் கிரமணச்சைவ சீதாசோக விநாசனஹ
லக்ஷ்மண ப்ராண தாதாச தசக்ரீவச்ச தர்பஹ
த்வாதசாதானி நமோ நி கபீந்தர்ஸ்ய மஹாத்மனஹ ஸ்வாபகாலே
படேந்நித்யம் யாத்ரா தாலே விசேஷதஹ
தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ஸர்வத்ரய விஜயி பவேத்

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு கோதண்டராமர்சீதாதேவி, லக்குமணருடன், அருள்தரும் ருக்மணிசத்யபாமா ஸ்ரீவேணுகோபாலருடன் குடிகொண்டுள்ள திருத்தலமாகிய சிறப்பு வாய்ந்த சென்னை, நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள ஆலயத்தில் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வ ரூபியாக பக்தர்களுக்கு காட்சி தருவதுஇத்திருத்தலத்தில் (தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்டது) சிறப்பம்சமாகும்.

ஸ்ரீராம ரக்க்ஷை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் ஸ்ரீஅனுமந் ஜெயந்தி பெருவிழா வழக்கம்போல் இவ்வாண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பின்வரும் நிகழ்ச்சி நிரல்படி ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு இலட்சார்ச்சனை 22.12.2024 ஞாயிற்றுக்கிழமை முதல் 02.01.2025 வியாழக்கிழமை வரையும், 26.12.2024 வியாழக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் ஆரம்பாகி 30.12.2024 முடியவும், இந்நிகழ்ச்சிகளில் ஒருபகுதியாக 28.12.2024 அன்று சந்தனக்காப்பு அலங்கார தரிசனமும், 30.12.2024 ஸ்ரீஅனுமந்ஜெயந்தி தினவிழாவும், ஏழு காலங்களாக மஹாசாந்தி, மூலமந்த்ரஜப, ஹோமங்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 2.1.2025 வியாழன் மாலை 7.00 மணி அளவில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு கண்டருள்வார். பக்தர்கள் இந்த அனுமன் ஜெயந்தி விழாவில் ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை, இலட்சார்ச்சனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இறைவன் அருளை பெற வேண்டுகிறோம்.

குடந்தை நடேசன்

The post காரியத் தடைகளை நீக்கும் அஞ்சனை மைந்தன் appeared first on Dinakaran.

Read Entire Article