நாமக்கல், மே 5: கீரம்பூரில் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவியர், காய்கறி பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் வட்டாரத்தில் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவியர் அவர்களது அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியர் பல்வேறு செயல்முறை விளக்கங்களை விவசாயிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள். காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டை போன்ற போன்ற பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும், மஞ்சள் நிற ஒட்டு பொறி பற்றி விவசாயிகளுக்கு மாணவியர் விளக்கம் அளித்தனர். மஞ்சள் நிற பொறி என்பது பிரகாசமான மஞ்சள் நிற காகிதத்தை பயன்படுத்தி அதற்கு மேற்பரப்பில் பசையை தடவுவதன் மூலம், பூச்சிகள் செடியை நெருங்கும் போது மஞ்சள் பொறியின் மீது ஈர்க்கப்படுகிறது. இதனால், பூச்சிகள் அதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடுவதால், இனப்பெருக்கம் செய்ய முடியாமல், கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மஞ்சள் நிற ஒட்டு பொறி ஒரு ஏக்கர் பரப்பளவில் 4 முதல் 6 மஞ்சள் ஒட்டும் பொறிகளை வைக்கலாம் என விவசாயிகளுக்கு மாணவியர் விளக்கம் அளித்தனர்.
The post காய்கறி பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி appeared first on Dinakaran.