காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு கீழக்கரையில் இன்று சிறப்பு முகாம்

5 hours ago 2

கீழக்கரை, ஏப்.23: தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் கீழக்கரையில் 2 நாள் நடைபெற உள்ளது. கீழக்கரை கோக்கா அஹமது தெரு அஸ்வான் சங்கத்தில் இன்றும், நாளையும் (ஏப்.24) கீழக்கரை கிழக்கு தெரு, அண்ணாப்பா கடை அருகே ஆயிஷா தொழுகைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மருத்துவ காப்பீட்டு அட்டை எடுக்காதோர் தங்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் கையொப்பம் இட்ட மனுவுடன் பங்கேற்கலாம். காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்போர் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதற்கு முன் நடந்த முகாமில் பங்கேற்று மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைக்கப்பெறாதோரும் தங்கள் ஸ்மார்ட் கார்டு காண்பித்து பெற்றுக் கொள்ளலாம். தங்கள் ஸ்மார்ட் கார்டு காண்பித்து 22 இலக்க எண்ணை தெரிந்து கொண்டு ஆன்லைனில் அட்டை எடுத்து கொள்ளலாம்.

The post காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு கீழக்கரையில் இன்று சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article