காபோன் நாட்டில் கயாக் படகு வீரர்கள் புதிய சாதனை: பெருவெள்ளம், நீர்வீழ்ச்சிகளை கடக்கும் சாகசக் காட்சி வெளியீடு!

2 hours ago 2

காபோன்: காபோன் நாட்டில் உள்ள அபாயகரமான நீர்வீழ்ச்சிகளை கயாக் படகுகள் மூலமாக கடந்து 4பேர் கொண்ட குழு சாதனை படைத்துள்ளது. மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு காபோன். இங்குள்ள ஐவிண்டோ நதி உயரமான பல்வேறு நீர்வீழ்ச்சிகளை கொண்ட அபாயகரமான ஆறாகும். இந்நிலையில், 145 கிலோ மீட்டர் நீளம் உடைய ஐவிண்டோ ஆற்றில் ஆபத்தான நீர்வழி பாதையில் பயணிக்க 4பேர் கொண்ட கயாக் படகு குழுவினர் முடிவு செய்து பயணத்தை தொடங்கினர்.

வழிநெடுகிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட அவர்கள் பெருவெள்ளம், உயரமான நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை கடந்த காணொளி பிரமிப்பை ஏற்படுத்தியது. காட்டாற்று வெள்ளத்தால் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரர்கள் ஆபத்து நிறைந்த ஐவிண்டோ ஆற்றினை கயாக் படகுகள் மூலம் கடந்த முதல் குழு என்ற புதிய சாதனையை படைத்துள்ளனர். சவால் நிறைந்த நீர்வழி பாதையை கடக்கும் சாகச காட்சிகள் டிரோன்கள் மூலம் பல்வேறு கோணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post காபோன் நாட்டில் கயாக் படகு வீரர்கள் புதிய சாதனை: பெருவெள்ளம், நீர்வீழ்ச்சிகளை கடக்கும் சாகசக் காட்சி வெளியீடு! appeared first on Dinakaran.

Read Entire Article