செங்கல்பட்டு: காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அக்டோபர் மாதம் 2.10.2024 (புதன்கிழமை) அன்று “காந்தி ஜெயந்தி” அரசு விடுமுறையை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post காந்தி ஜெயந்தி முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.