காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்.. நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி.!!

1 month ago 9

சென்னை: இன்றைய தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்பி சு.வெங்கடேசன் மறுபடியும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் வாசலுக்கு முன் இருந்த மகாத்மா காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகள் கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளான காந்தி ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களை மரியாதை செலுத்தினர். இந்நிலையில், இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது;

நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது.

பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள்.

நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை.

வாழ்க நீ எம்மான்.
என்றென்றும் வணங்குகிறோம் உன்னை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்.. நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி.!! appeared first on Dinakaran.

Read Entire Article