காந்தாரா: சாப்டர் 1 - 'எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுங்கள்' - மோகன்லால்

2 days ago 2

சென்னை,

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 27-ம் தேதி வெளியான படம், எல்2: எம்புரான். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மறுபுறம், காந்தாரா: சாப்டர் 1-ல் மோகன்லால் நடிப்பதாக சில காலமாக வதந்திகள் வந்தன. எம்புரான் படத்தின் புரமோசனின்போது, மோகன்லால் இந்த வதந்திகளுக்கு பதிலளித்தார்.

அவர் கூறுகையில், "காந்தாரா: சாப்டர் 1-ல் நடிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுங்கள்' என்றார். தற்போது 'காந்தாரா: சாப்டர் 1'படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ரிஷப் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Read Entire Article