காதல் விவகாரத்தில் எஸ்எஸ்ஐ மீது தாக்குதல்: மகளின் காதலன் உட்பட 4 பேர் சிக்கினர்

2 days ago 3

கோவை: கோவையில் காதல் விவகாரத்தில் சிறப்பு எஸ்எஸ்ஐயை தாக்கிய மகளின் காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (58). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிகிறார். இவரது மூத்த மகள் திவ்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த டிரைவர் விஜயகுமார் (29) காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் பாஸ்கரனுக்கு தெரியவந்தது.

விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளதால் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கணபதி மாநகரில் உள்ள பாஸ்கரன் வீட்டுக்கு விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேர் சென்று, திவ்யாவிடம் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என விஜயகுமார் மிரட்டினார். அங்கு வந்த பாஸ்கரனுடன் கடும் வாக்குவாதம் செய்து அவரை தாக்கினார்.

தடுக்க முயன்ற அவரது மனைவி மற்றும் மகள்களை மிரட்டிவிட்டு 4 பேரும் தப்பி சென்றனர். புகாரின்பேரில், போலீசார் ஊட்டியை சேர்ந்த விஜயகுமார், அவரது நண்பர்கள் தீபன் (26), கணேஷ் (22) மற்றும் கார்த்திக் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

The post காதல் விவகாரத்தில் எஸ்எஸ்ஐ மீது தாக்குதல்: மகளின் காதலன் உட்பட 4 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article