காதல் பிரச்னையில் விரோதம் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திக் கொன்ற சிறுவன் கைது

2 hours ago 3

சிவகாசி : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வீரமாணிக்கம் (18). சாத்தூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இதற்கு சிறுமியின் உறவுக்காரரான 17 வயது சிறுவன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணகி காலனி கால்நடை மருத்துவமனை அருகே சமரச பேச்சுவார்த்தைக்கு வீரமாணிக்கத்தை சிறுவன் அழைத்து வந்தார். அப்போது ஏற்பட்ட தகறாறில் திடீரென வீரமாணிக்கத்தின் நெஞ்சிலும், இடுப்பிலும் கத்தியால் குத்தி விட்டு அந்தச் சிறுவன் தப்பியோடி விட்டார்.

படுகாயம் அடைந்த வீரமாணிக்கத்தை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்தனர்.

The post காதல் பிரச்னையில் விரோதம் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திக் கொன்ற சிறுவன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article