காதல் தொல்லை கொடுத்த வாலிபர்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

2 months ago 12

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த 19-வயது இளம்பெண் ஒருவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் மாணவியை 2 வருடமாக காதலிப்பதாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 26-ந்தேதி மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, லோகேஷ் மாடி வழியாக ஏறி குதித்து மாணவியின் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லோகேஷை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த மாணசு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த மாணவியை பெற்றோர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மாணவியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லோகேஷை வலைவீசிதேடி வருகின்றனர். காதல் தொல்லை கொடுத்த வாலிபரால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article