கண்டமங்கலம், ஜன. 23: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் கொடுக்கூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் (30). இவர் கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்த இந்துஜா (25) என்ற பெண்ணை கடந்த 2021ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. சந்திரகுமார் சுத்துக்கேணி பகுதியில் உள்ள தனியார் மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இந்துஜா நேற்று முன்தினம் வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கணேஷ் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற இந்துஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துஜாவுக்கு மூட்டுவலி ஏற்பட்டதால் அதற்குரிய சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாளுக்கு நாள் அவருக்கு மூட்டுவலி அதிகமானதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த கடலூர் இளம்பெண் கண்டமங்கலத்தில் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post காதல் திருமணம் செய்த கடலூர் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு appeared first on Dinakaran.