காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் ஒடுகத்தூர் அருகே பெற்றோர் எதிர்பை மீறி திருமணம்

1 month ago 4

ஒடுகத்தூர், டிச.10: ஒடுகத்தூர் அருகே பெற்றோர் எதிர்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோதி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் பூஜா(20), இவரும் அதே பகுதியை சேர்ந்த கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வரும் பாண்டியன்(30) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் பூஜாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

இதனால், கடந்த 5ம் தேதி பூஜா மற்றும் அவரது காதலன் பாண்டியன் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பின்னர், வேலூர் தொரப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, மகளை காணவில்லை என்று பூஜாவின் பெற்றோர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காதல் ஜோடி நேற்று முன்தினம் பாதுகாப்பு வழங்கும்படி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து, இரு வீட்டாரின் பெற்றோர்களை காவல் நிலையம் வரவழைத்த போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பூஜா, காதலன் பாண்டியனுடன் செல்வதாக கூறியதால் போலீசார் அவருடன் அனுப்பி வைத்தனர்.

The post காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் ஒடுகத்தூர் அருகே பெற்றோர் எதிர்பை மீறி திருமணம் appeared first on Dinakaran.

Read Entire Article