காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய், தந்தை, 5 சகோதரிகள், 3 சகோதரர்கள் உட்பட 13 பேரை விஷம் கொடுத்து கொன்ற காதலி: பாகிஸ்தானில் பயங்கரம்

3 months ago 13

இஸ்லாமாபாத்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய், தந்தை, 5 சகோதரிகள், 3 சகோதரர்கள் உட்பட 13 பேரை விஷம் கொடுத்து கொன்ற காதலி மற்றும் அவரது காதலனை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்.  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் கைர்பூர் மாவட்டத்தை ஷைஸ்டா பரோஹி (18) என்ற பெண்ணுக்கு, அவரது உறவினருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இந்த திருமணத்திற்கு ஷைஸ்டா பரோஹி எதிர்ப்பு தெரிவித்தார்.

மாறாக மற்றொரு உறவினரான அமீர் பக்ஷி என்பவரை ஷைஸ்டா பரோஹி திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஷைஸ்டா பரோஹி – அமீர் பக்ஷி காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது குடும்பத்தினரை கொல்ல ஷைஸ்டா பரோஹி முடிவு செய்தார். அதன்படி தனது பெற்றோர், ஐந்து சகோதரிகள், மூன்று சகோதரர்களைக் கொல்வதற்காக, அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து கொடுத்தார்.

விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 10 பேரும் உயிரிழந்தனர். இந்த 10 பேருடன், ஒரு குழந்தை உட்பட 3 உறவினர்களும் கொல்லப்பட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரும் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை இருந்ததால் அவர்கள் இறந்திருக்கலாம் என போலீஸார் கருதினர். ஆனால் ஷைஸ்டா பரோஹி மட்டும் உயிருடன் இருந்ததால், அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் பலியானவர்கள் சாப்பிட்ட உணவுகளின் மாதிரிகளை எடுத்து போலீசார் ஆய்வு செய்தனர். இந்த உணவில் விஷம் காணப்பட்டதாக தெரியவந்தது.

இதற்கிடையில், ஷைஸ்டா பரோஹி தனது காதலன்அமீர் பக்ஷி யுடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். தனிப்படை போலீசார் இருவரையும் தேடிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டனர். அமீர் பக்ஷி விஷம் வாங்கி, அதனை ரொட்டி மாவில் கலந்து தனது குடும்பத்தினருக்கு கொடுத்ததாக ஷைஸ்டா பரோஹி வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆன நிலையில், தற்போது தான் முழு உண்மையும் வெளியாகி உள்ளது.

The post காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய், தந்தை, 5 சகோதரிகள், 3 சகோதரர்கள் உட்பட 13 பேரை விஷம் கொடுத்து கொன்ற காதலி: பாகிஸ்தானில் பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article