விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள நாகனேந்தல் கிராமத்தில் விவசாய கிணற்றில் கடந்த 2ம் தேதி சாக்கு மூட்டையில், உடலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது.
இதுகுறித்த போலீசார் விசாரணையில் அவர் அதே கிராமத்தை சேர்ந்த முருகன்(45) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார், கொலையான முருகனின் மகன் தவமணி(22) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தவமணி, அவரது நண்பர் அபுபக்கர்(23) ஆகியோர் சேர்ந்து முருகனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தன் காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் தவமணி, தனது இன்ஸ்டாகிராம் நண்பரான அபுபக்கருடன் சேர்ந்து முருகனை வெட்டிக் கொலை செய்துள்ளார் என்றனர்.
The post காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொன்ற மகன் கைது appeared first on Dinakaran.