
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் விக்ரம் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது விக்ரம் பேசுகையில், 'முன்பெல்லாம் காதல் தோல்வி என்றால்தான் தாடி வளர்ப்பார்கள், இப்போது காதலிப்பதற்காகவே தாடி வளர்க்கிறார்கள். தொடர்ச்சியாக இப்போது எல்லா படத்திலும் நானும் தாடி வைத்து நடிக்கிறேன்" என்றார்.